வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தி உள்ளது பாரத ஸ்டேட் வங்கி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தி உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து இந்த வட்டி விகிதம் 6.70 ல் இருந்து 6.95 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 6.80 ஆக இருந்த வீட்டுக்கடனுக்கான குறைந்தபடச வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி கடந்த மாதம் ஒன்றாம் தேதி 6.70 சதவிகிதமாக குறைத்து குறைந்தகால சலுகையாக அறிவித்தது.
அதே போன்று வீட்டுக்கடனுக்கான பிராசசிங் கட்டணமும் குறைந்தது 10000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடனுக்கான வட்டி விகித த்தை உயர்த்தியுள்ளதால், இதர பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வட்டியை உயர்த்தும் என கூறப்படுகிறது.
Comments