மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

0 2598

லஞ்ச புகாருக்கு ஆளாகி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை முதலமைச்சர் இதுவரை ஏற்றுக்கொண்டதாக தகவல் இல்லை. காவல்துறையினர் சிலரின் உதவியுடன் அனில் தேஷ்முக் மிரட்டி பணம் பறித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அனில் தேஷ்முக், மகாராஷ்டிர சிவசேனா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments