எங்கள் வாக்கு எங்களுக்கே கிடையாது லிஸ்ட்டில் ஸ்டாலின், உதயநிதி, கமல்ஹாசன், ஜெயக்குமார், குஷ்பூ!

0 9795

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி , ஜெயக்குமார் உள்ளிட்ட 5 நட்சத்திர வேட்பாளர்கள் தங்களுக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் முடிந்து விட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் மயிலாப்பூர் தொகுதியில் தங்கள் வாக்குகளை செலுத்தவுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் அவருடைய வாக்கு அந்த தொகுதியில் தான் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. 

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஆனால் அவருடைய வாக்கு மயிலாப்பூர் தொகுதியில் தான் உள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். ஆனால் அவருடைய வாக்கும் மயிலாப்பூர் தொகுதியில்தான் உள்ளது.அதேபோல ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு வின் வாக்கும், ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கும் மயிலாப்பூரில் தான் உள்ளது. 

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளருமான நடிகர் கமலஹாசனின் வாக்கும் மயிலாப்பூர் தொகுதியிலேயே வருவதால் அவரும் இங்கேதான் வாக்களிக்க உள்ளார்.இவர்களை தவிர்த்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியின் வாக்குகளும் மயிலாப்பூர் தொகுதியிலேயே வாக்களிக்கப் போகின்றனர். 

வீதி, வீதியாக அலைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் தங்களுக்கு தங்கள் வாக்கை செலுத்த முடியாத நிலை இருப்பது சற்று சோகம்தான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments