தொடர் நஷ்டம் எதிரொலி: ஸ்மார்ட்போன் உற்பத்தி, வர்த்தகத்திலிருந்து வெளியேறும் எல்.ஜி..!
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
தொடர் நஷ்டம், போட்டியாளர்களை எதிர்க்கொள்ள முடியாத சூழலால் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை முடிக்க எல்.ஜி திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 33,010 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருக்கும் எல்.ஜி. நிறுவனம், ஸ்மார்ட்போன் பிரிவிலிருந்து வெளியேறினாலும், பழைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குவோம் என உறுதியளித்துள்ளது.
Comments