”கொரோனா பரிசோதனை ஆய்வகம் 2,000ஆக அதிகரிப்பு” - அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
நாடு முழுவதற்கும் முன்பு ஒரே ஒரு கோவிட்-19 பரிசோதனை ஆய்வகம் இருந்த நிலையில், தற்போது 2000க்கும் மேற்பட்ட ஆய்வகங்களாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 40 வது முதியோர் பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட அவர் சிறப்புரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதுவரை இந்தியாவில் 7 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 6 கோடியே 50 லட்சம் டோஸ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.
Comments