தாமிரம், அலுமினிய பொருட்களின் இறக்குமதிக்கு முன்பதிவு அவசியம்: மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நடவடிக்கை
இரும்பு அல்லாத உலோக இறக்குமதி கண்காணிப்பு அமைப்பின் கீழ் 46 வகை தாமிரம் மற்றும் 43வகை அலுமினியப் பொருள்களின் இறக்குமதிக்கு முன்பதிவு செய்வதை மத்திய வர்த்தக அமைச்சகம் கட்டாயமாக்க உள்ளது.
இறக்குமதியாளர்கள் அலுமினியம், தாமிரம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முன்கூட்டியே ஆன்லைன் வழியாக தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அத்துடன், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பதிவு எண்ணையும் அவர்கள் பெற வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரக்கு வருவதற்கு எதிர்பார்க்கப்படும் தேதிக்கு 5 நாள்களுக்கு பின்பாகவோ அல்லது 60 நாள்களுக்கு முன்னதாகவோ இந்தப் பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் இதற்கான முன்பதிவை இன்று முதல் செய்து கொள்ளலாம் என்றும் அலுமினியம், தாமிரம் உலோகங்களின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments