”முன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கம்” -ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

0 4259
”முன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கம்” -ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

முன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக இந்திய ரயில்வே இந்த ரயில்களை இயக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வாரணாசி- சுல்தான்பூர், அமிர்தசரஸ்-பதான்கோட், ஜலந்தர் சிட்டி- பதான்கோட், ஃபெரோஸ்பூர்- லூதியானா, பட்டிண்டா- ஃபெரோஸ்பூர், டெல்லி- ரோஹ்தக், டெல்லி- பானிபட் ஆகியவை வடக்கு ரயில்வே இயக்குகிறது.

மேலும் UTS மொபைல் ஆப் பயன்பாட்டின் வசதியை ரயில்வே மீண்டும் செயல்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்த உதவும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments