தமிழகம் முழுவதும் 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு..! தேர்தல் பணிக்காக வெளி மாநிலங்களில் இருந்தும் போலீசார் வருகை
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 74 ஆயிரத்து 162 காவல்நிலைய போலீசாரும், 8,010 சிறப்புக் காவல் படையினரும், 23,200 துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
இதுதவிர ஊர்க்காவல் படையினர், தீயணைப்புப் படை வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள்- காவலர்கள் உள்ளிட்டோர் தவிர பிற மாநில காவல்துறையைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் நவீன ரக துப்பாக்கிகளுடன் துணை ராணுவப் படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தலைநகர் சென்னையில் மட்டும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
வாகனச் சோதனை, தங்கும் விடுதிகளை சோதனை செய்வது தீவிரப்படுத்தப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
Comments