தமிழகத்தில் ரூ.428 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்..!
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்புக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்குப் பணம் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை, வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 428.46 கோடி ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, 1950 என்ற எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் அலுவலர்களையும் 1800 4252 1950 என்ற எண்ணில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சி விஜில் செல்போன் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments