கொரோனா பரவலைத் தடுக்க சிறு ஊரடங்கு, போக்குவரத்துக் கட்டுப்பாடு தேவை -எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அறிவுரை
கொரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்கச் சிறு ஊரடங்கு, போக்குவரத்துக் கட்டுப்பாடு ஆகியன தேவை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைக்கக் கடுமையாகப் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவித்தல், ஊரடங்கு விதிப்பு, சோதனை அதிகரிப்பு, தொடர்புகளை அறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் கொரோனா பரவலைத் தடுக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படும் அதே நேரத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
Comments