திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை, துறைரீதியான நடவடிக்கை தான் - ஜே.பி.நட்டா
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் உள்ளிட்ட பலரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது துறை ரீதியான நடவடிக்கை தான் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவதாகத் தெரிவித்தார்.
இதில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை என்றும், தனது வீட்டில் சோதனை நடத்த வருமாறு உதயநிதி கூறியிருப்பது தேவையில்லாதது என்றும் நட்டா தெரிவித்தார்.
Comments