பிரச்சாரத்துக்கான நேரம் முடிவுற்றபின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
தேர்தல் பிரச்சாரத்துக்கான கால அவகாசம் இரவு 7 மணியோடு ஓய்ந்த நிலையில், அதன் பின்னர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
அதன்படி திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர், குறுஞ்செய்தி, இணையம் போன்ற எதன் மூலமும் தேர்தல் தொடர்பான விவகாரங்களை மக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments