காரைக்காலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 149 தங்க நாணயங்கள் பறிமுதல்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சுமார் 149 தங்க நாணயங்கள் பறக்கும் படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலின் பேரில், திருநள்ளாறு தொகுதி சுரக்குடி கிராமத்தில் பறக்கும் படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பறக்கும்படையினரை பார்த்தவுடன் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கையில் இருந்த தங்ககாசு உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
சோதனையில் தலா ஒரு கிராம் எடைகொண்ட 149 தங்க நாணயங்களும், 96ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments