அதிமுகவை அனிதா ஆதரிப்பது போல் சித்தரித்த வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதா சகோதரர் புகார்

0 2373
அதிமுகவை அனிதா ஆதரிப்பது போல் சித்தரித்த வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதா சகோதரர் புகார்: தனக்குத் தெரியாமல் ட்வீட் பதிவிடப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

திமுகவுக்கு ஆதரவாக அனிதா வாக்குச் சேகரிப்பது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனிதாவின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அனிதா அதிமுகவை ஆதரிப்பதுபோலச் சித்தரித்து அமைச்சர் பாண்டியராஜனின் டுவிட்டர் கணக்கில் வீடியோ வெளியானது.

இதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்ததுடன், அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் அனிதா பற்றிய ட்வீட் போட்டது தனக்குத் தெரியாது என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments