இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஸ்டாலின் முதல்வராக வேண்டி திமுக தொண்டர் செய்த விபரீதம்!

0 21078
ஸ்டாலின் முதல்வராக வேண்டி விரலை துண்டித்துக்கொண்ட குருவைய்யா

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டி தி.மு.க தொண்டர் கைவிரலை துண்டித்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவைய்யா.(66) இவருக்கு பழனிஸ்வரி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் குருவைய்யா இளம் வயது முதல் திமுக வின் தீவிர விசுவாசி.

இந்த நிலையில் கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக தோல்வி அடைந்ததால்,  விரக்தியில் இருந்து வந்துள்ளார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்று ஆண்டுதோறும் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஞாயிறன்று அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றார் குருவைய்யா. அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தனது கை விரலை துண்டித்துள்ளார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட கோவில் முன் குருவைய்யா நிற்பதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரிடத்தில் இருந்து கத்தியையும் கைப்பற்றி,  உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவைய்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments