புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் தேர்தல் செலவின பார்வையாளர், போலீசார், வருவாய்த் துறையினர் சோதனை
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை எழில் நகரில் சோத்துப்பாளை முருகேசன் என்பவரது வீட்டில், தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ்குமார் மீனாள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர்.
சோத்துப்பாளை முருகேசன் வீடு முழுக்க சோதனை போட்ட அலுவலர்கள், மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
Comments