தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்..! தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

0 2305
தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்..! தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இயேசு பிரான் மரித்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது...

வேளாங்கண்ணி:

உலக புகழ்பெற்ற நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி, ராட்சத மெழுகுவர்த்தி ஏந்தியும், பட்டாசுகள் வெடித்தும் திருப்பலியில் கலந்து கொண்டு கொண்டாடினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கல்லறையில் இருந்து இயேசு பிரான் உயிர்த்து எழுவது போன்ற தத்ருப காட்சி நிகழ்த்தப்பட்டது.

சாந்தோம்:

புகழ்பெற்ற சென்னை சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திரளான பகர்தர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்து கேக் வெட்டியும் கொண்டாடினர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் ஒன்றுகூடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments