"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 86,184 பேருக்கு கொரோனா தொற்று; 471 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தாக்கத்தின் அளவில் 7 மாநிலங்களில் பரவிய கொரோனா மட்டும் 80 விழுக்காடு என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் உச்சபட்சமாக மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் 4 ஆயிரத்து 300 பேரும் பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 58 ஆயிரத்து 500 பேர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் நேற்று மட்டும் 471 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Comments