சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை: 5 வீரர்கள் உயிர் தியாகம்..!
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரை தொடர்ந்து, 15 வீரர்களை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 30 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரை தொடர்ந்து 15 வீரர்களை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி, என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது, தேசம் என்றென்றும் அவர்களை நினைவுகூரும் என பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கூறியுள்ளனர்.
Comments