”எடப்பாடி மக்கள் பெருமை கொள்ளும் வகையில் தனது வெற்றி அமைய வேண்டும்” -முதலமைச்சர் வேண்டுகோள்

0 3393
”எடப்பாடி மக்கள் பெருமை கொள்ளும் வகையில் தனது வெற்றி அமைய வேண்டும்” -முதலமைச்சர் வேண்டுகோள்

ன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வனவாசி என்ற இடத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஜெயலலிதா இல்லாத நிலையில், தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தும் தேர்தல் என்பதால் எடப்பாடியில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் தனது வெற்றி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலின் அவரது தொகுதியில் எதுவுமே செய்யவில்லை என்றும், அங்கு பாலங்கள் கட்டிக் கொடுத்தது எல்லா வசதியும் செய்துகொடுத்தது அதிமுக ஆட்சியில்தான் என்றும் குறிப்பிட்டார். மேலும் தன் மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவருடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில், கலைஞர் இடம் தர மறுத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தன் தந்தைக்கு 6 அடி நிலம்கூட எடப்பாடி பழனிசாமி தரவில்லை என செல்லுமிடம் எல்லாம் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும், அவரது நாடகம் எடுபடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, கட்சியை உடைக்க தொடர் முயற்சி செய்த திமுகவினர், இப்போது கூட நாடகம் நடத்தி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி தொகுதியின் ராசியால்தான் தாம் படிப்படியாக பதவிகளைப் பெற்று முதலமைச்சராக உயர்ந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments