"வியாபாரிகளே" மிரட்டி கட்டிங் வாங்க மாட்டேன்..நம்பி ஓட்டு போடுங்க..! தொகுதி மாறிய பெண் எம்.எல்.ஏ

0 7473

கடை நடத்தும் வியாபாரிகளே ஆட்களை அனுப்பி கட்டிங் வாங்க மாட்டேன் நம்பி வாக்களியுங்கள் என்று மூன்றாவது முறையாக தொகுதி மாறி போட்டியிடும் அதிமுக பெண் எம்.எல்.ஏ ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கனிதா சம்பத், 2011 ஆம் ஆண்டு திருப்போரூரிலும், 2016 ஆம் ஆண்டு மதுராந்தகத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 3 வது முறையாக, தொகுதி மாறி செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கடைவீதியில் திறந்த ஜீப்பில் நின்று பேசிய கணிதா சம்பத், தான் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்த மதுராந்தகத்தில் பெரிய பெரிய கடைகள் எல்லாம் உண்டு என்றும், எந்த ஒரு கடையிலும் கட்டிங் பெற்றதில்லை என்றும், கட்சிகாரர்களை அனுப்பி பணம் கேட்டு தொந்தரவு செய்ததில்லை என்றும் கூறினார். மக்களுக்காக சேவை செய்வதற்காக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது தன்னை வெற்றி பெற வைத்தால் இந்த தொகுதிக்கு கலைக்கல்லூரி கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்த வேட்பாளர் கணிதா சம்பத்திடம் , அருகில் இருந்த ஆதரவாளர்கள் அப்படியே காலேஜ் கொண்டு வருவேன் என்று சொல்லுங்கள் என்று கூற , கல்லூரி தான் காலேஜ் என்று கூறி சமாதானப்படுத்தினார்.

அதே நேரத்தில் திமுக கூட்டணி வேட்பாளராக செய்யூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள விசிக வேட்பாளர் பனையூர் பாபு, பானை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்தால் வருகிற ஜூன் மாதம் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று கூறி ஆதரவு திரட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments