சிலையா? ஸ்வீட்டா? ஸ்வீட் கடையில் விநோத விழிப்புணர்வு..!

0 2845
சிலையா? ஸ்வீட்டா? ஸ்வீட் கடையில் விநோத விழிப்புணர்வு..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடியின் வடிவத்தில் ஸ்வீட் சிலைகளை செய்து அனைவரும் வாக்களிக்க வேண்டுமென விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இனிப்பு கடை உரிமையாளர் ஒருவர்.

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட ஆறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் 6ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் திருவிழாவில் பிரதான கட்சிகளும், வேட்பாளர்களும் வித்யாசமான முறையில் வாக்குகளை சேகரித்து ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்திலான ஸ்வீட் சிலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தின் ஹவ்ரா மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஸ்வீட் சிலைகள் காண்போரை வியப்படைய செய்துள்ளன. பார்ப்பதற்கு பொம்மைகள் போன்று இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் சிலைகள் ஸ்வீட் என்றால் அனைவரும் நம்ப மாட்டார்கள் என்றே கூறலாம். இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கும், மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தனது காலில் அடிப்பட்டு எலும்பு முறிந்த போதிலும் வீல்சேரில் சென்றபடி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோன்று பிரதமர் மோடியும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு நேரில் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பரபரப்பு நிறைந்த இந்த தேர்தல் களத்தில் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரு தலைவர்களின் சிலைகளை ஸ்வீட்டாக செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஸ்வீட் கடையின் உரிமையாளர் Casto Haldar. வீல்சேரில் மம்தா பானர்ஜி அமர்ந்திருப்பது போன்றும், நீண்ட தாடியுடன் தனது ஆடையில் தாமரை சின்னம் இருக்க பிரதமர் மோடியின் சிலையும், பிற கட்சி தலைவர்களின் 3 தலைகளும் ஒரே உடலில் இருப்பது போன்றும் ஸ்வீட் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய ஸ்வீட் கடையின் உரிமையாளர் Casto Haldar, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டுமென்பதை உணர்த்தவே தலைவர்களின் சிலை வடிவத்தில் ஸ்வீட் செய்ததாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments