வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக திமுகவினர் இருவர் கைது
வேலூர் மாவட்டம் கேவி.குப்பம் பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
துத்தித்தாங்கல் பகுதியில் 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்றனர்.
அங்கு திமுக சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களுடன் பணம் விநியோகித்துக் கொண்டிருந்த ரமேஷ், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் 21 ஆயிரத்து 880 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Comments