அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!
அந்தமான் கடல் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்றும், மீனவர்கள் 24 மணி நேரத்திற்கு வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மன்னார்வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன், புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதை குறிக்க துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
Comments