திண்டிவனம் அருகே பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2,380 குக்கர்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, உரிய ஆவணங்களின்றி லாரியில் ஏற்றி கொண்டுவரப்பட்ட 2,380 குக்கர்கள் பறக்கும் படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் பகுதியில் பறக்கும் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து கோவை நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 2,380 குக்கர்களை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments