சென்னை வந்தது 2.14 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள்..!

0 2381
சென்னை வந்தது 2.14 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள்..!

கூடுதலாக இரண்டு லட்சத்து 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை நிலவியது. இதை நிவர்த்தி செய்வதற்காக, ஐதராபாத்தில் இருந்து கோவாக்சின் தடுப்பு மருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, பொது சுகாதாரத்துறை இயக்குநரக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதே போல் 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. ஆக மொத்தம் 13 .16 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகம் முழுவதும் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments