பண்ணைத் தொழிலாளர்களுக்குப் போதைப்பொருள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு: பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

0 1429
பண்ணைத் தொழிலாளர்களுக்குப் போதைப்பொருள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு: பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

ஞ்சாபில் பண்ணைத் தொழிலாளர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கப் போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பண்ணைகளில் பணியாற்றும் உத்தரப்பிரதேசம், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் போதைப்பொருள் வழங்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

போதைப்பொருள் பயன்பாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட பலரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகளுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகக் கூறியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments