தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

0 4939

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அமைந்துள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

போடி சுப்புராஜ்நகர் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஒட்டி, தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி என்பவரது வீடு அமைந்துள்ளது.

அங்கு 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரொக்கமோ, ஆவணங்களோ சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments