கேரளாவில் சுவாமியே சரணம் அய்யப்பா என்று பிரச்சாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி

0 2374

சுவாமியே சரணம் அய்யப்பா என்ற மூன்று முறை முழங்கிய பக்தி முழக்கத்துடன் கேரள சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி சபரிமலை விவகாரத்தை பினராயி விஜயன் அரசு கையாளும் விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கேரள மாநிலத்திலும் தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை மலர்க் கொத்துடன் வரவேற்க வேண்டிய மாநில அரசு அவர்களை போலீசாரின் லத்தியால் அடித்து விரட்டியதாக கண்டித்தார் பிரதமர் மோடி.

அரசியல் வன்முறை, மதப்பிரிவினைவாதம், ஊழல், நிர்வாக ரீதியான குழப்பம் மிகுந்த இடதுசாரிக் கூட்டணி அரசை நிராகரிக்கும்படி பிரதமர் மோடி வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments