இதுவரை 80 நாடுகளுக்கு இந்திய தடுப்பூசி விநியோகம்: வெளியுறவு அமைச்சகம்
இதுவரை 80 க்கும் அதிகமான நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிண்டாம் பாக்சி (Arindam Bagchi) கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி மீது மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டும் ஏழை நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
Comments