11 மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை
கொரோனா பரவிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலைமைச் செயலக அதிகாரிகள் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சக செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.
தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் சூழல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 புள்ளி 5 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போதைய சூழலில் 6 புள்ளி 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது தினசரி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 ஆயிரமாக இருந்தது.
தற்போது அது மீண்டும் உச்சம் எடுத்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments