பூசாரியிடம் ஆசி பெற்ற பழனி திமுக வேட்பாளர்; நேற்று வரவேற்பு..! இன்று எதிர்ப்பு..!
பழனி தொகுதியில் உள்ள கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கச்சென்ற திமுக வேட்பாளருக்கு மேளதாளம் முழங்க தெருவில் பெண்கள் குத்தாட்டம் போட்டு, ஊர் பூசாரியின் அருள்வாக்குடன் வரவேற்பளித்தனர். முதலில் வரவேற்று பொன்னாடை அணிவித்த ஊராட்சி தலைவி ஒருவர் தற்போது வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பழனி தொகுதியில் திமுக வேட்பாளராக ஐ.பி செந்தில்குமார் களமிறங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களான, கே.சி.பட்டி, தாண்டிக்குடி,குப்பம்மாள் பட்டி, பண்ணைக்காடு,மங்களம் கொம்பு,வடகவுஞ்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குப்பம்மாள் பட்டியில் அவருக்கு திமுகவினரின் ஏற்பாட்டின் பேரில் பெண்கள் சாலையில் குத்தாட்டம் போட்டு வரவேற்பளிக்கப்பட்டது
அப்போது ஊர் பூசாரி ஒருவர் அருள் வாக்கு கூறுவதாக வேட்பாளரின் நெற்றியில் திரு நீறு பூசி தலைமுடியை பிடித்து ஆட்ட, அதிர்ந்து போன ஐ.பி.செந்தில்குமார் அந்த பூசாரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். உடனிந்தோர் அவர் வெற்றி பெறுவார் என்று அருள் வாக்கு கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.
அருள் வாக்கு நேரம் இழுத்துக் கொண்டே போனதால் தாங்க முடியாது ... சீக்கிரம் முடிச்சி உடு... என்று நிர்வாகி ஒருவர் சொல்ல பூசாரி டக்கென்று இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை, திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில்குமாருக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்த புகைபடங்களை முக நூலில் பதிவிட்டு, வடகவுஞ்சி ஊராட்சி மன்ற தலைவி தோழிஆனந்தும், அவரது கணவர் ஆனந்தும் திமுகவில் இணைந்து விட்டதாக கூறி திமுகவினர் பதிவிட்டுள்ளனர். இதனை கண்டித்த அவர்களும் அந்த கிராமத்து மக்களும் பிரச்சாரத்துக்கு வந்த திமுகவினர் தங்கள் வீட்டு கதவுகளில் ஒட்டிச்சென்ற ஸ்டிக்கரை கிழித்துப் போட்டனர்.
தாங்கள் எப்போதும் அதிமுகவில் நீடிப்பதாக அந்த ஊராட்சி மன்றதலைவி தெரிவித்துள்ளார்
Comments