கணவருக்கு கொரோனா.. பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரசாரம் ரத்து
பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் நடைபெறுவதாக இருந்து பிரசாரத்தை அவர் ரத்து செய்து உள்ளார், இதே போன்று தமிழகத்தில் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments