தமிழகத்திற்கு நலத்திட்டங்கள் - பிரதமர் மோடி

0 4364
தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மதுரையை அடுத்த பாண்டிகோவில் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கத்துடன் பேச்சை தொடங்கிய அவர், அனைவரும் நலமா என தமிழில் கூட்டத்தினரை நோக்கி விசாரித்தார்.

மதுரை வந்ததில் தமக்கு மிக்க மகிழ்ச்சி என்ற அவர், உலகின் மிக மூத்த மொழியான தமிழை சங்கம் வைத்து வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு என்றார். தமிழ் கலாச்சாரத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. மதுரை மண், காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற அவர், திமுக கூட்டணி மதுரையின் பெருமையை உணரவில்லை என்றார்.

தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதை பட்டியலிட்ட அவர், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுமென உறுதி அளித்த பிரதமர், மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார்.

நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய ஜனநாயகக்கூட்டணி பாடுபடுகிறது என்றும், கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக - அதிமுக கூட்டணியின் கவனம் முழுவதும் நாட்டின் வளர்ச்சி மீதே உள்ளது என்றார்.

வாரிசு அரசியலுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், உயர்மட்ட அதிகார மமதை கொண்டிருப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று சாடினார். விவசாயிகள், மீனவர்கள் நலனுக்காக மேற்கொண்டு வரும் திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர், இலங்கை சிறையில் தற்போது எந்த தமிழக மீனவர்களும் இல்லை என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments