வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

0 1938
வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண்களுக்கு ஆரத்தி தட்டில் பணம் போட்டது தொடர்பான புகாரில், அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண்களுக்கு ஆரத்தி தட்டில் பணம் போட்டது தொடர்பான புகாரில், அமைச்சர் சி.வி.சண்முகம் மீது  2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் விழுப்புரம் நகர்ப் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீசார், அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது, அந்தப் பணத்தை வேட்பாளர் வரவு செலவு கணக்கில் கொண்டு வராதது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments