புதிய மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா? ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1484
தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரிகளை, மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது, மருத்துவ கவுன்சில் விதிகள், தற்போது மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டு, புதிய விதிகளின்படி, மருத்துவ கல்லூரிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவ கல்லூரிகளை கட்ட அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments