பிறக்கப்போவது என்ன குழந்தை? அறியும் ஆவலில் வினோத விமான சாகசம் விபத்தில் முடிந்த சோகம்
பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் ஆவலுக்காக மெக்சிகோவில் நடத்தப்பட்ட ஒரு வினோதமான விமான சாகசம் விபத்தில் முடிந்து அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ கேன்கன் நகரில் கரீபியன் கடலுக்கு அருகே உள்ள காயல் மீது சாகசத்துடன் பறந்த இந்த விமானம் பிங்க் நிற புகையை வானில் கக்கியது. விமானத்தை படகு ஒன்றில் இருந்து பெற்றோராகப் போகும் தம்பதியர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிங்க் நிற புகையை கண்டதும் தங்களுக்கு பெண்குழந்தை பிறக்கப்போவதாக அவர்கள் உற்சாகத்தில் கத்தினர். ஆனால் அடுத்த சில வினாடிகளில் சாகசம் செய்த விமானம் தலைகுப்புற காயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பைலட்டும், கோபைலட்டும் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.
Comments