அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற தேர்தல் அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

0 3847
அசாமில் வாக்குப் பதிவு நடத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், தேர்தல் அதிகாரிகள் 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பென்ட் செய்துள்ளது.

அசாமில் வாக்குப் பதிவு நடத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், தேர்தல் அதிகாரிகள் 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பென்ட் செய்துள்ளது.

பதார்கண்டி என்ற தொகுதியில் இந்த இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட போது கும்பல் ஒன்று வாகனத்தை வழிமறித்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த வாகனம் பிரேக் டவுன் ஆனதால் மற்றோர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீடியோ வெளியாகி வைரலானது.

இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட மாற்றுவாகனம் அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலர்கள் 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைய வாகனத்தை மறித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments