கடந்த 27ஆம் தேதி சச்சினுக்கு கொரோனா உறுதியான நிலையில் மும்பை மருத்துவமனையில் அனுமதி..

0 1535
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் தனது மும்பை இல்லத்திலேயே, தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சச்சின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சச்சின், மருத்துவர்களின் அறிவுறுத்தலால், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் வீடு திரும்ப உள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ள சச்சின், தமக்கு கொரோனா தொற்று குணமாக பிரார்த்தித்த, வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments