அமைச்சர் கே.சி.வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்ததாக, திருப்பத்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கவேலு பணியிடை நீக்கம்

0 3279

அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்ததாக திருப்பத்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணியுடன் பிரச்சாரத்திற்கு சென்ற காரில் இருந்து 21ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டீசர்ட் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் புகார் அளித்தும், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலைய டி.எஸ்.பி. தங்கவேலு உடனடி நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments