மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் படுகொலை

0 1861

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த மாநிலத்தின் பாஸ்சிம் மேதினிபூர் மாவட்டம் கேஷ்பூர் பகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக,திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் உத்தம் டோலுயி என்பவரை, 10-15 பேர் சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

பாஜகவைச் சேர்ந்த ரவுடிகள் இந்த கொலையை செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments