தமிழகத்தில் நீர் மேலாண்மையில் வரலாற்று சாதனை..! முதலமைச்சர் பிரச்சாரம்

0 2686

தமிழகத்தில் நீர்மேலாண்மை திட்டம் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் நிலை காத்துள்ளதாகவும் இது ஒரு வரலாற்று சாதனை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக மேற்கொண்ட பிரசாரத்தில் அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாடு முழுவதும் இடம் வாங்கி ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

அம்மா மினி கிளினிக் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் மிகவும் பயனடைந்து வருவதாக கூறிய அவர், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

பல துறைகளில் சாதனை படைத்து அதற்காக ஏராளமான விருதுகளை தமிழக அரசு வாங்கி உள்ளதாக முதலமைச்சர் கூறினார். நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்ற அவர், நீர்மேலாண்மை திட்டம் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் நிலைகளை காத்துள்ளதாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் குன்னூர், உதகமண்டலம் வேட்பாளர்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments