தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றவர் ஜெயலலிதா - அமித்ஷா

0 2924

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரித்தார்.

திருக்கோவிலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வணக்கம் சொல்லி பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டினார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தை நல் வழியில் வழிநடத்தும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments