MLA ஆன பின்னர் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள் ? ஸ்ரீபிரியாவை வம்பிழுத்த எம்.ஜி.ஆர்.ரசிகர்..!

0 8579
MLA ஆன பின்னர் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள் ? ஸ்ரீபிரியாவை வம்பிழுத்த எம்.ஜி.ஆர்.ரசிகர்..!

சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை மடக்கி எம்.ஜி.ஆர்.ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டு வம்புக்கு இழுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை ஸ்ரீபிரியா, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, இன்று நைனார் தெரு, அப்பர் சாமி கோயில் தெரு, புது தெரு, வீரப்பெருமாள் தெரு, கணேசபுரம் உள்ளிட்ட இடங்களில் நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ஸ்ரீபிரியாவை வழிமறித்த நபர் ஒருவர், கையில் எம்.ஜி.ஆரின் பெயரை பச்சை குத்தியிருப்பதை காண்பித்து, மயிலாப்பூர் தொகுதியில் இதுவரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் யாரும் எதுவும் செய்யாத நிலையில், நீங்கள் மட்டும் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தன்னுடைய 13 வயதில் இருந்து சினிமாதுறையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருவதாக கூறிய ஸ்ரீபிரியா, தங்களை நம்பி வாக்களித்தால் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார்.

ஸ்ரீபிரியாவின் பதிலால், ஓரளவுக்கு சமாதானமான அந்த எம்.ஜி.ஆர்.ரசிகர், நீங்கள் எம்.ஜி.ஆருடன் படத்தில் நடித்தவர் என்பதால் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது, வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தாருங்கள் என கூறி பிரச்சனையை முடித்தார்.

தான் எம்.எல்.ஏ.வான பின்னர், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லையென்றால், மக்கள் நீதி மய்யம் கட்சியில் புகார் அளிக்கலாம் என்ற ஸ்ரீபிரியா, அவ்வாறு புகார் அளித்தால் தனக்கு பதிலாக வேறு நபரை நியமனம் செய்வார்கள் என்று கூறி சமாதானப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments