ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்

0 2858
ஜி பே, பே-டிஎம், ஃபோன்பே மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்

ஜிபே, ஃபோன்பே, பே-டிஎம் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு பணம் வழங்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

ஜிபே, ஃபோன்பே, பே-டிஎம் போன்ற செயலிகள் மூலமாக ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments