தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 4,495 போலீசார் ஈடுபட டிஜிபி உத்தரவு

0 2675

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 4,495 போலீசார் ஈடுபட டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் அன்று சட்டம்-ஒழுங்கு போலீசார் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே, சிபிசிஐடி, சிலை கடத்தல், பொருளாதார பிரிவு என பல பிரிவுகளிலிருந்து சுமார் 4,495 போலீசாரும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments