துபாயில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு செல்லமுடியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நடிகர் கமல்ஹாசன்
துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு செல்லமுடியாமல் தவித்த வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார்.
துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் போட்டி வரும் 8 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்கு தமிழகத்திலிருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடைசி நேரத்தில் வரவேண்டிய உதவி வராததால், செய்வதறியாது தவித்த அவர்கள், கோவையில் பிரச்சாரத்திற்காக வந்த கமல்ஹாசனை சந்தித்து உதவி கோரினர். உடனடியாக அவர்கள் அனைவரும் துபாய்க்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா மக்கள் நீதி மய்யம் சார்பாக வழங்கப்பட்டது.
Comments