தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்றும், வருகிற 4-ம் தேதி வரை வட மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என 26 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments