இயக்குநர் ஷங்கர் மற்ற படங்கள் இயக்க தடைக்கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

0 3324
இயக்குநர் ஷங்கர் மற்ற படங்கள் இயக்க தடைக்கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

யக்குனர் ஷங்கர் மற்ற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு போடப்பட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் ஆனால் தற்போது வரை 80 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதால் முழுமையாக படத்தை முடித்து கொடுக்கும் வரை இயக்குநர் சங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு மீதான விசாரணையில் இயக்குநர் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments