நெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி

0 10413
நெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் உயிரிழந்த பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாங்குநேரி சுங்கச்சாவடியில், மாரியப்பன் என்ற ஊழியர் வசூல் மையத்தின் கண்ணாடியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு சுங்கச்சாவடிக்குள் புகுந்ததோடு, பணியில் ஈடுபட்டிருந்த மாரியப்பன் மீதும் மோதியது.

பின்னரும், லாரி நிற்காமல் வேகமாக சுங்கச்சாவடியை கடந்து சென்றது. சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று லாரியை மடக்கி, ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திடீரென பிரேக் பிடிக்காததால் லாரியை நிறுத்த இயவில்லை என ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments